முதுமையை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி

மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர்.

வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.

ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.

வயதாகச் செய்யும் இரசாயனம்

அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனணத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள் வரை உயிர்வாழும்.

ஆனால், இந்த மாற்றம் செய்யப்பட்ட எலி அதனைவிட ஐந்தில் ஒரு மடங்கு அதிகமான காலத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தது. அதற்கு வயதானகாலந்த்துல் வரும் தசைகள் சுருங்குதல், ஞாபக மறதி போன்ற எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

அதேவேளை, அந்த ஹைபோதலமஸ் பகுதியில் அந்த இரசானத்தை விஞ்ஞானிகள் அதிகரித்தபோது, அந்த எலிகளின் வாழ்வுக் காலம் குறைந்துபோயிற்று.

அந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள உயிரியல் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கு தற்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.

இந்த ஆய்வுகள் முதுமையுடன் தொடர்புடைய பல நோய்கள் குறித்த புதிய தகவல்களை அறிய உதவும். அத்துடன் எதிர்காலத்தில் எமது வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கவும் இது உதவலாம்.