ஐரோப்பிய செயற்கைக் கோள் பூமியில் விழுந்தது

  • 11 நவம்பர் 2013
Image caption Goce செயற்கைக் கோள் 2009-ம் ஆண்டில் ஏவப்பட்டது

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்குச் சொந்தமான செயற்கைக் கோள் ஒன்று எரிந்த நிலையில் பூமிக்கு வந்து விழுந்துள்ளது.

1000 கிலோகிராம் எடையுடைய இந்த செயற்கைக் கோளின் எரியாத சிதிலங்கள் கிழக்கு ஆசியா முதல் ஆன்டாக்டிக்கா வரையான பாதையில் எங்கோ ஓரிடத்தில் விழுந்துள்ளதாக நம்பப்படுகிறது.

'விண்வெளியின் ஃபெராரி' என்று அழைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் பூமிக்குள் தானாக வந்துவிழுந்துள்ள முதலாவது ஐரோப்பிய செயற்கைக் கோள் என்று கூறப்படுகிறது.

எரிபொருள் தீர்ந்துபோன நிலையில் காணப்பட்ட இந்த செயற்கைக் கோள் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட காலத்தை விட இரண்டு மடங்கு காலம் விண்வெளியில் இருந்துள்ளது.

புவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த செயற்கைக் கோள் 2009-ம் ஆண்டில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைக் கோள் அதன் பணிகளை முடித்துக்கொண்ட பின்னர், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடின்றி பூமியில் வந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.