ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

Image caption இந்திய புலி

இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் புலிகள் எண்ணிக்கையை கணக்கிடும் பணியின் முதல் கட்ட கணக்கெடுப்பு நேற்று திங்கட்கிழமை துவங்கியிருக்கிறது.

இந்திய காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடுதழுவிய அளவில் கணக்கெடுக்கப்டுவது வழக்கம்.

தென்னிந்தியாவில் புலிகள் சரணாலயங்கள் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியானது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையில் பரவியிருப்பதால், இந்த புலிகள் கணக்கெடுக்கும் பணியானது இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புக்களில் ஒன்றான ஓசை என்கிற கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன் இந்த கணக்கெடுப்பு நடைமுறைகள் 90 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.