'புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி'

Image caption புகைப்போரின் எண்ணிக்கை உயர்கிறது

உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால் , புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலக மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், புகைப்போரின் விகிதம் குறைந்து வருவதாக அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா போன்ற சில நாடுகளில், ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான ஆண்கள் தினமும் புகைக்கிறார்கள்.

மக்கள் புகைக்கும் பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுக்க, வரிகளை அதிகரிப்பது, சிகெரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகளை பிரசுரிப்பது மற்றும் பொது இடங்களில் புகைப்பதைத் தடைசெய்வது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.