மின் தடங்களிலிருந்து வரும் ஒளியால் பாதிக்கப்படும் விலங்குகள்

படத்தின் காப்புரிமை Getty
Image caption உயர் சக்தி மின் தடங்கள் விலங்குகளை அச்சுறுத்துகின்றன- ஆய்வு

உயர் சக்தி மின் தடங்களிலிருந்து வரும் அதி ஊதா நிற ஒளி உமிழ்வுகள் விலங்குகளை அச்சுறுத்தி விலகி ஓடச் செய்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

"கன்சர்வேஷன் பையாலஜி" என்ற சஞ்சிகையில் எழுதும் ஆய்வாளர்கள், இந்த மின்சார கம்பிகளிலிருந்து வரும் மின் உமிழ்வுகள் மனிதக் கண்களுக்குப் புலப்படாதவை , ஆனால் அவை விலங்குகளால் பார்க்கமுடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த மின்சார ஒளி உமிழ்வுகள் விலங்குகளின் உறைவிடங்களைப் பிரிப்பதுடன், அவை புதிய இடங்களுக்கு செல்லும் பாதைகளையும் குலைக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மின்சார நிறுவனங்கள் இது போல விலங்குகளை அச்சுறுத்துவதைத் தவிர்க்கும் வண்ணம் மின் தடங்களை அமைப்பது குறித்த வழிமுறைகளைப் பரிசீலிக்க உதவ, அவர்களுடன் இந்த ஆய்வு முடிவுகளை விவாதிக்க இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.