300 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனின் புதிய ஆய்வுப் பரிசு

படத்தின் காப்புரிமை H4
Image caption ஜான் ஹாரிஸன் பரிசு வாங்கிய ஹெச்4- கடிகாரம்

பிரிட்டனில் புதிய பரிசுத் தொகையுடன் விஞ்ஞான-ஆய்வு முயற்சியொன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்திருந்த இவ்வாறான ஆய்வுப் பரிசொன்றின் விளைவாகவே பிரிட்டிஷ் தச்சுத் தொழிலாளியான ஜான் ஹாரிஸன், கப்பல்கள் எந்த புவி நெடுங்கோட்டுப் பகுதியில் (longitude) நிற்கின்றன என்பதை துல்லியமாக காண்பிக்கின்ற தொழிநுட்பத்தை கண்டுபிடித்தார்.

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள 17 மிலியன் டாலர்கள் பெறுமதியான இந்த ஆய்வுப் பரிசுத் தொகைக்கான ஆய்வுத்துறைகளை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் 6 வெவ்வேறு ஆய்வுத் துறைகளில் ஒன்றைத் தெரிவுசெய்ய முடியும்.

கார்பன் வெளியேற்றம் குறைந்த வான்வெளிப் பயணம், கடல்நீரிலிருந்து குறைந்த செலவில் உப்பைப் பிரித்தல், உலகில் உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான புதிய தீர்வுகள் இப்படி பல்வேறு விடயங்களும் இந்தத் துறைகளில் அடங்குகின்றன.