உடல் பருமன் பிரச்சினை அதிகரிப்பு என்கிறது ஆய்வு

படத்தின் காப்புரிமை PA
Image caption உடல் பருமன் பிரச்சினை அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘லான்ஸட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதிக எடை உள்ளவர்கள் அல்லது பருமனானவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பு மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொதுவாக வருமானங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த உடல் எடையும் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் முப்பது சதவிகத மக்கள் பருமனான உடல் மிக்கவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அதே அமெரிக்காவில் மற்றொரு முப்பது சதவிகித மக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.