ரத்த நாள விரல் ஸ்கேனர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விரலைக் காட்டி வங்கிக் கணக்கிற்குள் நுழைய புதிய வழி

இணையம் வழியாக வங்கிக்கணக்கிற்குள் நுழைய அனுமதி பெறுவதென்பதில் ஒரு புதிய வழிமுறை வந்துள்ளது.

ஏராளமான கடவுச்சொற்களை ஞாபகம் வைத்துக்கொள்ள கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இது.

வாடிக்கையாளர்களை அவர்களின் விரலில் ஓடும் ரத்த நாளங்களை வைத்து அடையாளப்படுத்துகிற இன்ஃபிராரெட் ஸ்கேனர் கருவி புழக்கத்துக்கு வந்துள்ளது.

கடவுச் சொற்கள், ரகசிய எண்கள் எல்லாம் இல்லாமல் வாடிக்கையாளர் தனது விரலை வைத்து வங்கிக் கணக்குள் நுழைய இந்த ஸ்கேனர் வகைசெய்யும்.