ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொருளாதார வளர்ச்சி மொழிகளை அழிக்கிறது

அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகில் எண்ணிக்கையில் குறைவான மக்கள் பேசும் பல மொழிகளை படிப்படியாக காணாமல் போகச்செய்து கொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

உலக மொழிகளில் சுமார் 25 சதவீத மொழிகள் இப்படியான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் இவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக விவரங்கள் பிபிசி தமிழோசையின் இந்தவார (09-09-2014) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.