மங்கள்யான் பாகங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செவ்வாயை ஆராயப்போகும் இந்தியாவின் மங்கள்யான்

செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள முதல் விண்கலமான மங்கள்யான் செப்டம்பர் 24ஆம் தேதி புதன்கிழமை அக்கிரகத்தை அடைந்து அக்கிரகத்துக்கு மேலே ஒரு சுற்றுவட்டப்பாதையில் வலம் வருமாறு நிறுவப்படவுள்ளது.

விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் சரியாக நிறுவப்படுவதென்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள விஷயம் குறித்தும், மங்கள்யான் பயணத்தின் நோக்கம், அதன் வழியாக செவ்வாய் பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் போன்றவை குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், தமிழ் அறிவியல் எழுத்தாளருமான நெல்லை சு. முத்து தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.