கர்ப்பப்பை மாற்று சிகிச்சை மூலம் பிள்ளை பெற்ற ஸ்வீடன் பெண்

மாற்று கர்ப்பப்பை பெற்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணொருவர் பிள்ளை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பரிசோதனை முயற்சியாக இப்பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது

போன மாதம் அந்தப் ஆண் பிள்ளை சற்றுக் குறைமாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியை நடத்திய கோத்தன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேட்ஸ் பிரன்ஸ்ட்ரோம். கூறுகிறார்.

ஆய்வுப் பரிசோதனையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒன்பது பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர்.

சிகிச்சைக்குப் பின் இவரல்லாது வேறு இரண்டு பெண்களும் கருத்தரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ, அல்லது புற்றுநோய் வந்து கர்ப்பப்பை இழந்தோ இருக்கும் பெண்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பிள்ளை பெற்றுக் கொள்ள ஒரு வழி பிறந்துள்ளது.

ஆனால் தற்போதைக்கு இந்த கர்ப்பப்பை மாற்று சிகிச்சை ஒரு அறிவியல் பரிசோதனை என்ற அளவில்தான் உள்ளது.