டார்க் மேட்டர் பற்றி புதிய விவரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றாக இருந்துவருகின்ற 'டார்க் மேட்டர்' எனப்படும் காண முடியாத பொருள் இருப்பது பற்றியும் அது எங்கு இருக்கிறது என்பது பற்றியும் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு பொருளில் பெரும்பங்கு இந்த டார்க் மேட்டர்தான் என்றாலும், இந்தப் பொருளைப் பார்க்க முடியாது, ஆனால் தூரத்திலுள்ள அண்டங்களில் இருந்து வருகின்ற ஒளியில் இந்த டார்க் மேட்டர் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் அது இருப்பதை அறிய முடிகிறது.

தற்போது ஆண்டிஸ் மலைகளிலுள்ள அதிநவீன தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி சர்வதேச விஞ்ஞானிகள் முந்நூறு பேர், டார்க் மேட்டர் பரவியுள்ள வானின் ஒரு பகுதியை படம்பித்து விவரம் வரைந்துள்ளனர்.

அண்டங்களோடு டார்க் மேட்டர் பெரும்பெரும் திரிகளாக பரவியிருப்பதையும், அவற்றுக்கிடையில் வெற்றிட இடைவெளி இருப்பதையும் புதிதாக எடுக்கப்பட்டுள்ள படங்கள் காட்டுகின்றன.

டார்க் மேட்டரிலும் புரியாத புதிராக இருக்கும் 'டார்க் எனர்ஜி' என்று சொல்லப்படும் விளங்கா சக்தி பற்றி அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.