இருபதாயிரம் கிலோமீட்டர் தூர இடப்பெயர்ச்சியில் சாம்பல் நிறத் திமிங்கிலம்

சாம்பல் நிறத் திமிங்கிலம் பருவத்துக்கேற்ப இடம்மாறுவதை கண்காணித்த விஞ்ஞானிகள், அந்த இடப் பெயர்ச்சியில் அவை இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும், உலகில் ஒரு பாலூட்டி விலங்கினமும் செய்கின்ற மிக அதிக தூர இடப்பெயர்ச்சி இதுதான் என்றும் கூறுகின்றனர்.

சாம்பல் நிறத் திமிங்கிலம்
படக்குறிப்பு,

சாம்பல் நிறத் திமிங்கிலம்

சாம்பல் நிற பெண் திமிங்கிலம் ஒன்றின் நடமாட்டத்தை அமெரிக்க மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் 172 நாட்கள் கண்காணித்தனர்.

ரஷ்ய கரையோரத்தில் ஆரம்பித்து பேரிங் கடல் வழியாக அமெரிக்காவின் பசிஃபிக் கரைக்கு வந்து பின்னர் தெற்காக மெக்ஸிகோ வரை சென்று அங்கு குட்டிகளை ஈன்றுவிட்டு பின்னர் ரஷ்யக் கரையோரத்துக்கே அது திரும்பியுள்ளது.

இவ்வகைத் திமிங்கலங்களை பாதுகாப்பதற்கான முயற்சியின் அங்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்றி 'பயாலஜி லெட்டர்ஸ்' என்ற சஞ்சிகையில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.