செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது மங்கள்யான்

  • 18 ஆகஸ்ட் 2015

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Image caption இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Image caption ஓஃபிர் சஸ்மா என்பது புதன் கிரகத்தில் இருக்கும் நீளமான பள்ளத்தாக்குப் பகுதியாகும்.

2014 செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது.

முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையைப் படைத்தது.