தூக்கத்தை மட்டுமல்ல, உடல் நேர ஒழுங்குணர்வையும் பாதிக்கும் காபி

  • 17 செப்டம்பர் 2015
படத்தின் காப்புரிமை Thinkstock

காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும் என்பது தெரிந்த விஷயம்தான், ஆனால் காபி உடலின் நேர ஒழுங்குணர்வையும் ( பாடி க்ளாக்) மாற்றிவிடுகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

காபியில் இருக்கும் கெஃபெயின் என்ற ரசாயனம், உடலில் தூக்கத்தை தூண்டும் மெலடோனின் என்ற ஹார்மோன் தயாரிப்பை தாமதப்படுத்துவதாக பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரங்கள் முன்னர் ஒரு இரட்டை எஸ்ப்ரஸ்ஸோ குடிப்பது உடல் இயற்கையாக மெலடோனின் என்ற இந்த ஹார்மோனை உற்பத்தி செய்வதை 40 நிமிடங்கள் வரை தாமதப்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

உடலின் நேர ஒழுங்குணர்வை பாதிப்பதில் கஃபேயினின் பங்கு பற்றிய இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள், தூக்கப்பிரச்சனைகள் மற்றும் விமானப் பயணக் களைப்பு போன்றவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்யும் என்று பிபிசியின் அறிவியல் செய்தியாளர் கூறுகிறார்.