ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐன்ஸ்டைன் 'சொன்னதை' தேடிச் செல்கிறது ஆய்வுக்கலம்

  • 3 டிசம்பர் 2015

'ஈர்ப்பு அலைகள்' என்று ஒன்று இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை சோதிக்கும் நோக்குடன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆய்வுக்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த பொதுச் சார்புக் கோட்பாட்டிலேயே (Theory of General Relativity) இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை நோக்கி இந்த லீஸா பாத்ஃபைண்டர் ஆய்வுக் கலம் செல்கின்றது.