ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐன்ஸ்டீன் சொன்ன ஈர்ப்புவிசை அலையை விஞ்ஞானிகள் 'கண்டுபிடித்தனர்'

  • 12 பிப்ரவரி 2016

ஈர்ப்புவிசை என்றால் என்ன என்பதை முழுமையாக அறிய விழையும் முயற்சியில் அளப்பரிய கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியிலிருந்து ஒரு பில்லியன் ஒளியாண்டுகளுக்கும் அதிக தொலைவில் இரண்டு கருந்துளைகள் மோதிக் கொண்டதால் உருவான ஈர்ப்புவிசை அலைகளையே அவர்கள் அவதானித்துள்ளனர்.

ஈர்ப்பு விசை அலைகளின் இந்த முதல் கண்டுபிடிப்பு வானியல் ஆய்வில் புதிய சகாப்தம் ஒன்றுக்கு வழிவகுத்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

பல தசாப்தங்களாக நடந்துவந்த ஆய்வின் பலனாக கிடைத்துள்ள இந்தக் கண்டுபிடிப்பு, 'பிக் பாங்' என்ற அண்டம் உருவாகக் காரணமானதாகக் கூறப்படும் 'பெரு வெடிப்புக்' கோட்பாட்டை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஐன்ஸ்டீன் 1915-இல் வெளியிட்ட தனது பொதுச் சார்பியல் (General Relativity) கொள்கையில், இந்த ஈர்ப்புவிசை அலைகள் பற்றி எதிர்வுகூறியிருந்தார்.