புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம்

புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption புற்றுநோயை கண்டுபிடிக்க ஒரு ஆப்ஸ் அறிமுகம்

புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.

இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து சுகாதார அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பாவிக்குமாறு, ஸ்காட்லாந்தின் சுகாதார அமைசசர் ஷோனா ராபின்சான் கேட்டுக் கொண்டுள்ளார்.