அரசி துவக்கி வைத்த ஆசிய சிங்கங்களின் லண்டன் குடியிருப்பு

அரசி துவக்கி வைத்த ஆசிய சிங்கங்களின் லண்டன் குடியிருப்பு

ஆசிய சிங்கங்களுக்காக லண்டன் மிருகக்காட்சிசாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய பிரத்யேகப் பிரிவை இங்கிலாந்து மகாராணி திறந்து வைத்திருக்கிறார்.

அழிந்துவரும் அரிய வகையான சிங்கங்களை பாதுகாப்பதற்கான திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இத்தகைய முன்னெடுப்புகள் சிங்கங்களை பாதுகாக்காது என்று வாதிடும் சில மிருக நல செயற்பாட்டாளர்கள், விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடங்களை மிருகக்காட்சிசாலையில் உருவாக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

லண்டன் மிருககாட்சி சாலையில் இருந்தபடி அரசி உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்துவரும் ஆசிய சிங்கங்கள் குறித்த பிபிசியின் பிரத்யேக காணொளி