"முன்னெப்போதும் இல்லாத அளவில் நீரிழிவு நோயாளிகள்"

உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption `36 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரிப்பு'

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

1980ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2014இல் 4 மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனம் 2014இல் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 422 மில்லியன் எனவும் தெரிவித்துள்ளது.

வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்கள் நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை இந்த நோய் காரணமாக 2012இல் 15 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நீரிழிவு நோய் காரணமாக மேற்கு பசுபிக் நாடுகளில்தான் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.