240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம்

  • 7 மே 2016

முதலையைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட கடல்வாழ் விலங்கினம் ஒன்று சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை IVPP
Image caption இந்த விலங்கினம் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது

புதிதாக கிடைக்கபெற்ற புதைபடிவத்திலிருந்து முற்றாக தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த மிகப்பழமையான கடல்வாழ் விலங்கினம் என ஸ்காட்லாந்திலுள்ள அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கிடைத்த புதைபடிமங்களை ஆராய்ந்த அவர்கள், வினோதமான வகையில் சுத்தியல் போன்ற தலைவடிவம் கொண்ட அந்த உயிரினம், கடல்நீருக்கு அடியில் இருந்த தாவரங்களையே உணவாகக் உட்கொண்டன என அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Olivier Rieppel Field Museum
Image caption தாவரங்களை மட்டுமே உண்ட இந்த விலங்கினத்தை தாடை மற்றும் பற்களின் அமைப்பு இப்படி இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

அடோபொடெண்டாடஸ் என அழைக்கப்படும் அந்த உயிரினம், அகண்ட தாடைகளையும், பட்டையான கூர்வடிவப் பற்களையும் கொண்டிருந்தன என்பது இந்தப் புதைபடிமங்களில் தெரிகிறது.

அப்படியான பற்களைக் கொண்டு கடலுக்கு அடியில் இருந்த பாறைகளைச் சுற்றி வளர்ந்திருந்த தாவரங்களை சுரண்டி அவை உணவாக உட்கொண்டன.

இந்த உயிரனத்துடன் சமகாலத்தில் வாழ்ந்த ஊர்வன விலங்கினங்கள் மீன் மற்றும் இதர உயிரனங்களை அல்லது தமது இனத்தையே அடித்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனவும் அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.