பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்

புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன
படக்குறிப்பு,

புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன

அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு,

ஆய்வின் பல ஆச்சரியகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன

வட மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாறைகளில், அந்தப் பெரும் மோதலில் வெடித்துச்சிதறி ஆவியாகிபோன சில தாதுப்பொருட்கள் சிறிய கண்ணாடிபோன்ற மணிகளில் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், SPL

படக்குறிப்பு,

மோதலின் அதிர்வு காரணமாக எரிமலைகள் வெடிக்கும், நிலநடுக்கங்கள் ஏற்படும்

அவ்வளவு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியது நிலநடுக்கங்களையும், எரிமலை வெடிப்புகளையும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.