புற்றுநோய்க்கு குறைந்த கால கதிரியக்கச் சிகிச்சை

  • 5 ஜூன் 2016

புற்றுநோயாளிகள் மிக குறுகிய காலத்தில் கதிரியக்க சிகிச்சையை முடித்துவிட முடியும் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை

புற்றுநோயாளிகள் வாழ்வதற்கான வாய்ப்புக்களில் இந்த சிகிச்சை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என தெரிய வந்துள்ளது.

இதற்காக நடைபெற்ற ஆய்வக பரிசோதனையில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை என மூன்று வாரங்கள் புற்றுநோயாளிகள் கதிரியக்க சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

நாளைக்கு ஒருமுறை என நீண்டகாலமாக கதிரியக்க சிகிச்சை எடுத்து கொண்டவர்களுக்கு இருந்த ஏறக்குறைய அதே வாழ்நாள் விகிதத்தையே குறுகிய காலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் பெற்றதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SPL

உடல் முழுவதும் பரவாத நிலையில் இருக்கும் சிறிய செல் நுரையீரல் புற்று நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது, சிக்காகோவில் நடைபெற்ற அமெரிக்க ஆய்வக புற்றுநோயியல் சொசைட்டி மாநாட்டில் வெளியிடப்பட்டது.