மரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்

நம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Think Stock

இவர்கள் அளித்துள்ள சிகிச்சை இந்த நோயால் ஏற்படும் நிலைமை மோசமாவதை தடுப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த நோய் பெற்றிருந்த சிறியதொரு குழுவினரின் நோய் எதிர்ப்பு அமைப்புகளை அழித்துவிடுவதற்கு கதிரியக்க சிகிச்சையை பயன்படுத்தியதை ‘லேன்செட்’ என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை science photo library

அவ்வாறு அழிக்கப்பட்டவை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களை பயன்படுத்தி மீண்டும் உருவாக்கப்பட்டன.

இந்த சிகிச்சை கணிசமான ஆபத்தை கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். 24 பேர் அடங்கிய அந்த சிறிய குழுவில் ஒருவர் இறந்துள்ளார்.

ஆனால், சிகிச்சை பெற்று உயிருடன் இருப்பவர்களுக்கு அந்த நோய் மீண்டும் வரவில்லை.

உலக அளவில் இரண்டு மில்லியன் மக்கள் இந்த தண்டுவட மரப்பு நோயால் அல்லல்படுகின்றனர். இந்த நோயால், நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலை பாதித்து, மூளை நரம்பு செல்களையும், தண்டுவடத்தையும் சேதப்படுத்துகிறது.