பூமியைச் சுற்றும் சிறு விண்கோள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை

பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாதரணமாகக் கருதப்படும் இதற்கு, 2016 எச்ஓ3 என்று பெயரிடப்பட்டுள்ளது.

பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.

இந்தக் கோளை, பூமியும் சூரியனும் , மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு, ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்ட அங்குமிங்கும் மாறி மாறி தாண்டும் இயக்கத்தில் இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தச் சிறுகோள், 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.