சூரிய சக்தியால் 90 மணிநேர பயண முயற்சியில் சோலார் இம்பல்ஸ்

சூரிய சக்தியால் உலகைச் சுற்றிவரும் முயற்சியாக சோலார் இம்பல்ஸ் விமானம் ஒன்று நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

நியூயார்க்கில் இருந்து ஸ்பெயினின் செவெல்லுக்கு, அட்லாண்டிக்கை தாண்டி செல்லும் இந்த பயணத்திற்கு 90 மணிநேரம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்து தயாரித்த இந்த விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டது.

ஜம்போ ஜெட் விமானத்தைவிட நீளமான இறக்கை கொண்ட இந்த விமானம் ஒரு காருக்கு ஒத்த எடையுடைதாகும்.