ஜூபிடரை நெருங்குகிறது ஜூனோ விண்கலன்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜூனோ விண்கலன், ஜூபிடர் (வியாழன்) கோளின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை NASA

பிரிட்டிஷ் நேரப்படி காலை 0415க்கும் ( இந்திய நேரப்படி 0845) அது சுற்றுவட்டப்பாதையில் சேரும்.

நாசாவின் இந்த விண்கலன் ஒரு நேர்த்தியான பிரேக் போடும் நடவடிக்கையைச் செய்தால்தான் அது வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியால் இழுக்கப்பட்டு, அதன் சுற்றுவட்டப்பாதையில் இணைய முடியும்.

அந்த நடவடிக்கையில் அது வெற்றி பெற்றால், அது வியாழனை ஒன்றரை ஆண்டு சுற்றி வந்து, அந்த வாயுகிரகத்தைப் பற்றி ஆய்வுகளை நடத்தும்.

பின்னர் அது அந்த கிரகத்தின் விண் சூழலில் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.

ஒரு பிலியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கலன் ஜூபிடரை அடைய ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இந்தச் செய்தி குறித்து மேலும்