வியாழன் கிரகத்தை நெருங்கிய ஜூனோ விண்கலம் (புகைப்படத் தொகுப்பு)

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜூபிடர் ( வியாழன்) கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலம் ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் அந்த கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது.

சுமார் 800 மிலியன் கிமீ தொலைவில் நடைபெற்ற இந்த சாதனையால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜூனோ விண்கலன் குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஜூன் 4 ஆம் நாள் வெற்றிகரமாக நுழைந்தவுடன் திட்ட மேலாளர், நாசா முதன்மை ஆய்வாளர், நாசா கோள் அறிவியல் இயக்குநர் ஆகியோரின் மகிழ்ச்சி
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜூனோ விண்கலத்தின் ஐந்தில் ஒரு பகுதி வடிவான சிறிய மாதிரி கலிபோர்னியா பசாதெனாவிலுள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில்காட்சிக்கு வைக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில், கோள் பரப்பில் ஆய்வு நடத்தும் ஊர்தி மற்றும் விண்கலம் பொருத்தப்பட்ட சுத்தமான அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஜூனோ விண்கலத்தின் சூரிய பேனல் மாதிரி
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசா அதிகாரிகளால் மேசை கணினி திரையில் விவரிக்கப்படும் ஜூனோ விண்கலம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜூனோ விண்கலத்தின் ஐந்தில் ஒரு பகுதி வடிவான சிறிய மாதிரி
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் விண்கலப் பாதை கண்டறிதல் மற்றும் ஆதரவு வழங்கும் தொழில்நுட்ப வல்லுநர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் திட்டக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள காட்சி திரைகள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் ஜூனோ விண்கலத் திட்ட மேலாளரும், திட்ட முதல்வரும்.
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜூனோ விண்கலத்தின் கால் அளவு சிறிய மாதிரியை பார்வையிடும் சுற்றுலா குழவினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜூனோ விண்கலத்தின் கால் அளவு சிறிய மாதிரியை பார்வையிடும் சுற்றுலா குழுவினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption விண்ணில் செலுத்தப்படும் முன்னர் ஜூனோ விண்கலம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption .புளோரிடாவின் கேப் கனாவெரலில் ஏர்வூதி தளம் 41 -இல் விண்ணில் செலுத்தப்படும் ஜூனோ விண்கலம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் ஜூனோ விண்கலத்தின் வியாழன் (ஜூபிடர்) கோள் நோக்கிய பயணம் தொடங்கியது
படத்தின் காப்புரிமை Getty
Image caption ரோஸ் பெவுல் விளையாட்டு அரங்கில் காணப்படும் ஜூனோ விண்கலத்தின் முழு வடிவம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜூனோ விண்கலத் திட்டக் குழுவினர்