ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சர்ச்சையில் சிக்கி இருக்கும் போக்கிமான் விளையாட்டு: பிபிசி கிளிக் காணொளி

  • 17 ஜூலை 2016

கடந்த வாரம் புதிய போக்கிமான் கோ விளையாட்டு உலகளாவிய நிகழ்வாக ஆனது. இந்த ஸ்மார்ட்போன் விளையாட்டு விளையாடுபவர்கள் ஜி.பி.எஸ் மூலம் போக்கிமான் இடத்தைக் கண்டுபிடித்து, அதை பயிற்றுவித்து, சண்டையில் ஈடுபடுத்த முடியும். ஆனால் இது சர்ச்சைக்குரியதாக நிரூபணமாகியுள்ளது. இந்த விளையாட்டில் மூழ்கியவர்கள் தங்களை காயப்படுத்திக்கொண்டனர். பிறர் விளையாடுபவர்களிடம் திருடுவதற்காக அவர்களை கூட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று ஏமாற்ற முயற்சித்ததாக கைது செய்யப்பட்டனர்.

ஹைப்பர்சோனிக் ட்ராவல் எனப்படும் அதிவிரைவுப் பயணத்திற்கான முயற்சியில் ஒருபடி முன் சென்றுள்ளோம். இந்த பயணத்தால் லண்டனில் இருந்து சிட்னி செல்ல நான்கு மணி நேரம் தான் ஆகும். தற்போது, ஒரு நாள் முழுக்க பயணிக்க வேண்டியுள்ளது.

ஐரோப்பியன் ஸ்பைஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் ஒரு மணி நேரத்தில் 6,500கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு கலப்பு ராக்கெட் ஜெட் இயந்திரத்தை சோதனை செய்ய முதலீடு செய்துள்ளது.

நிலப்பரப்பில் எந்தப்பகுதியிலும், எத்தகைய மலைப்பகுதியிலும் தானாக ஓடும் கார்டுகளை இயக்குவது சாத்தியம் என்பதை ஜாக்குவாரின் லேண்ட் ரோவர் ஆராய்ச்சி சாத்தியமாக்கும். கேமரா மற்றும் ரேடார் மற்றும் லேசர் சென்சார்கள் மனிதர்களை விட சிறந்த முறையில் பார்த்து, எந்த விதமான சூழ்நிலையிலும், வண்டியை பாதையில் செலுத்த முடியும்.

முடிவாக, சில நேரங்களில் போதுமான இடம் இல்லை என தோன்றும்.

நகரும் மரச்சாமான்கள் இருந்தால் எப்படி இருக்கும்? எம்ஐடி மீடியா ஆய்வக தொழில்நுட்பத்தில், ஓரி நிறுவனம் உங்கள் அறையை நகர்த்தி, சரியான இடத்தில் சரியான அளவுக்கு இடவசதியை ஏற்படுத்தும்.

MIT Media Lab technology, Ori என்ற வசதி மூலம் வசிக்கும் அறையில் சரியான இடத்தை சரியான நேரத்தில் நகர்த்த முடியும். அதிக இடவசதி ஏற்படுத்தக்கூடிய அதே நேரத்தில், இருக்கின்ற வீட்டை பெரிதுபடுத்த முடியாது.