புதிய 104 கிரகங்கள் கண்டுபிடிப்பு

நமது சூரிய அமைப்புக்கு வெளியே 104 புதிய கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Nasa AmesJPLCaltechT Pyle
Image caption கெப்லர் விண்நோக்கியைச் சித்தரிக்கும் வரைபடம்

இதில் நான்கு கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன.

இந்த நான்கு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன; அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

கெப்லர் விண்நோக்கி மூலமும், பூமியிலிருந்து செய்யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் 21 கிரகங்கள், அவைகளின் சூரியனிலிருந்து வசிக்கக்கூடிய தொலைவில் உள்ள பகுதியில் இருக்கின்றன. இந்தத் தொலைவில் இருந்தால்தான் கிரகங்களில் உயிர் வாழ அனுமதிக்கக்கூடிய அளவு திரவ நிலையில் தண்ணீர் இருக்கும்.

இந்த கெப்லர் விண்நோக்கி செயலிழந்துவிட்டதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கருதப்பட்டது ஆனால் அதன் நான்கு சக்கரங்களில் இரண்டு இழக்கப்பட்ட நிலையிலும் , நாசா விஞ்ஞானிகள் அந்த விண்கலனை இயங்கும் நிலையில் வைத்திருக்கிறார்கள்.