உலகை முதல்முறையாக சுற்றி வந்து சோலார் இம்பல்ஸ் 2 விமானம் சாதனை

  • 26 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Reuters

சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி, உலகை சுற்றி வரும் சோதனை முயற்சியை சோலார் இம்பல்ஸ் 2 விமானம் நிறைவு செய்துள்ளது. உலகை முதல் முறையாக வெற்றிகரமாக சுற்றி வந்து இது சாதனை படைத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிலிருந்து பயணத்தை தொடங்கிய இந்த விமானம், உலகை சுற்றி வருவதற்கு 16 மாதங்கள் எடுத்துகொண்டு, உள்ளூர் நேரப்படி அதிகாலை நான்கு மணி தாண்டிய சற்று நேரத்தில் அபுதாபியை வந்தடைந்தது.

விமானி பெர்டிரான்ட் பிக்காடு இந்த பயணத்தின் 17-வது மற்றும் கடைசி நிலையான கெய்ரோவை விட்டு சனிக்கிழமை புறப்பட்டார்.

உலகை மாற்றக்கூடிய மாசு விளைவிக்காத தொழில்நுட்பத்தின் ஆற்றலை இந்த விமானம் நிரூபித்துள்ளதாக, இந்த முயற்சிக்கு பின்னால் இருக்கும் சுவிட்சாலாந்திலிருந்து இயங்கும் அணி கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP

ஓராண்டுக்கு முன்னர் ஜப்பானிலிருந்து ஹவாய் தீவிற்கு பறந்த மிக நீண்ட பயணத்தின்போது, இந்த விமானத்தின் மின்கலன்களில் அதிக வெப்பம் உருவானதால், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த விமானம் செயல்படவில்லை.