உங்களுக்கு தேஜா-வூ மூளையா?

படத்தின் காப்புரிமை Thinkstock

தேஜா-வூ என்ற விசித்திரமான உணர்வுக்கு விளக்கம் ஒன்றை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறியிருக்கிறது.

மூளையின் ஞாபகத் தவறுகளை சோதித்துப் பார்ப்பதுதான் இந்த உணர்வு என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், போலியான ஞாபகங்களை தூண்டச் செய்து, விரைவாக மறைந்துவிடும் தேஜா-வூ உணர்வை தன்னார்வலர்களுக்கு இந்த விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

பின்னர் அவர்களின் மூளையை ஸ்கேனிங் (வரிமம்) செய்கிறபோது அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தினர்.

மிகவும் தெரிந்தவைகளாக எண்ணுவதற்கும், அவ்வாறு இருக்கவே முடியாது என்று தெரிந்திருப்பதற்கும் இடையிலான ஒரு போராட்டத்திற்கு முடிவு காணும் முயற்சிக்கு முன்மொழிவுகளை வழங்கும் வகையில் மூளையின் தீர்மானங்கள் எடுக்கும் பகுதி விழித்துக் கொள்கிறது என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தேஜா-வூ விசித்திர உணர்வை அனுபவிப்பது மூளை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.