ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குறுங்கோளில் கல்லெடுக்கச் செல்லும் நாசா விண்கலம்

Asteroid எனப்படும் குறுங்கோளுக்கு சென்று திரும்பும் விண்கலன் ஒன்றை வானில் ஏவியுள்ளது நாசா.

நூறுகோடி டாலர் செலவில் அனுப்பப்பட்டிருக்கும் ஆசிரிஸ் ரெக்ஸ் விண்கலனின் நோக்கம் குறுங்கோளின் கல் ஒன்றை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்புவது.

இந்த விண்கலன் கொண்டுவரக்கூடிய அந்த குறுங்கோளின் கல், சூரிய குடும்ப கிரகங்கள் எப்படி உருவாயின என்பதை அறிய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.