ஆழிப்பேரலை ஆண்டு நிறைவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
மட்டக்களப்பில் தற்காலிக குடியிருப்பின் வெளியே பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று

மட்டக்களப்பு

 


நிகழ்ச்சியைக் கேளுங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது வீடுகளை இழந்த 22 சதவீதமான குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக குடியிருப்பகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்

கடலோர பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 200 மீட்டர் எல்லைக்குள் வசித்து வந்த 3780 குடும்பங்களே இப்படி தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்

200 மீட்டர் எல்லைக்கு அப்பால் வசித்து வந்த 13365 குடும்பங்களைப் பொறுத்தவரை அரசாங்க இழப்பீட்டு தொகைகளைப் பெற்று தமது வீடுகளை புனரமைத்தும் புதிதாக அமைத்தும் வருகின்றன.

ஆனால் 200 மீற்றர் எல்லைக்குள் வசித்து வந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்து கொடுக்கும் பொறுப்புகளை ஏற்றிருந்த போதிலும் இதுவரை 500 வீடுகளுக்கான வேலைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வீடு கூட குறிப்பிட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை.

தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருக்கும் இந்த குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் அவல வாழ்க்கை வாழ்வதாக தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்

இவர்களுக்கான வீடமைப்பு பணிகளில் இது வரை காலமும் ஏற்பட்ட தாமதங்களுக்கு காணிகளை தெரிவு செய்வது முதல் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி கூறுகின்றார்.

இருப்பினும் இவ்வருட முடிவிற்குள் 125 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,
அடுத்த ஆண்டிற்குள் சகலருக்கும் வீடுகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு செய்தியாளர் உதயகுமார் வழங்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.
 
^^ மேலே செல்க தொடக்கப் பக்கம்