ஆளும் அரிதாரம்
பாகம் ஒன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எம்.ஜி.ஆர். திரையிலே தோன்ற புல்லரித்துப் போகும் ரசிகர்கள்

பாகம் ஒன்று

 


நிகழ்ச்சியைக் கேளுங்கள்

தமிழர்களுக்கும் திரைப்படத்திற்குமான தொடர்பு என்பது, உலகளாவிய அளவில் பல சமூகவியலாளர்களின் ஆய்வுக்குரிய ஒரு கருப்பொருளாக விளங்கி வருகிறது.

மற்றவர்களுக்கு திரைப்படமும், அதன் கதாநாயகர் மற்றும் கதாநாயகிகளின் தாக்கம் என்பது பெருமளவு திரையரங்கோடு நின்றுவிடுகிற ஒன்றாக இருக்கலாம். அனால் தமிழர்களுக்கு, இந்த அரிதார ஆளுமை என்பது திரையரங்கையும் தாண்டி, பல்வேறு வடிவங்களில், பல்வேறு வழிமுறைகளில் நீண்டு நீடிக்கும் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து.


எம்.ஜி.ஆர் படத்திற்கு பூஜை செய்யும் காந்தா

எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம். ஆம், சென்னையில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி அதில் தொடர்ந்து பூசை செய்துவரும் காந்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரை தனது தெய்வமாகவே வரித்திருக்கிறார். தனது இந்தப் பக்தியை எவரும் பரிகாசம் செய்வதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. எம்ஜிஆருக்காக சென்னை உயர்நீதிமன்றத்தை ஒட்டி அவர் கட்டியிருக்கும் நடைபாதை கோவிலை அரசு இடித்தால் அந்த கோவிலோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளப்போவதாக கூறுகிறார் அவர்.


விஜயகாந்த்துக்கு கோவில் கட்டிய இராஜேந்திரன்.

இந்த அரிதார ஆளுமை என்பது எம்.ஜி.ஆரோடு நில்லாமல் ஏனைய காதாநாயகர்களுக்கும் இன்றும் தொடர்கிறது. உதாரணமாக நடிகர் விஜயகாந்துக்கு கோயில் கட்டியுள்ளார் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசப்பட்டியில் இருக்கும் இராஜேந்திரன். மற்றவர்களுக்கு வெண்டுமானால் விஜயகாந்த் ஒரு சாதாரண நடிகராக தெரியலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் தான் தமிழ்க்கடவுள் என்கிறார் இராஜேந்திரன்.


 
^^ மேலே செல்க தொடக்கப் பக்கம் செல்க >>