ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சாதனையை முறியடித்த லியாம் மாலோன்

படத்தின் காப்புரிமை ATSUSHI TOMURA
Image caption லியாம் மாலோன்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் மாற்றுத் திறனாளர் (பாராலிம்பிக்) ஒலிம்பிக் போட்டிகளில் நியூஸிலாந்து மாற்றுத் திறனாளி தடகள வீரரான லியாம் மாலோன், தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

நியூஸிலாந்தில் உள்ள நெல்சன் நகரை சேர்ந்த 22 வயது இளைஞரான லியாம் மாலோன், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் 200 மீட்டர் டி 44 போட்டி பிரிவில், பந்தய தூரத்தினை 21.06 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த பிரிவில், பந்தய தூரத்தை ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 21.30 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ஓட்டப் பிரிவில் பிரிட்டனின் ஜோனி பீக்காக்கிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்ற லியாம் மாலோன், நடப்பு பாராலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

லியாம் மாலோன் பதக்கம் வென்றதன் மூலம், ஒரே நாளில் நியூஸிலாந்து தனது மூன்றாவது பதக்கத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்