பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை

  • 13 செப்டம்பர் 2016

மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை தீபிகா மாலிக் பெற்றிருக்கிறார்,

ரியோவில் திங்கள் கிழமை நடைபெற்ற ஃஎப் -53 குண்டு எறிதல் இறுதி போட்டியில் 4.61 மீட்டர் (15.12 அடி) தொலைவிற்கு குண்டு எறிந்து அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, இதற்கு முன்னர் உயரம் தாண்டுதல் போட்டியில் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு மற்றும் வருண் பாட்டி வென்ற தங்க மற்றும் வெண்கலப் பதக்கங்களோடு சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாகியுள்ளது,

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்தியாவின் மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டுக்குள்ள சாத்தியக்கூறுகள் பற்றி இந்திய மக்கள் விழிப்பு பெறுவார்கள் - தீபிகா மாலிக்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை இந்தியாவிலுள்ள பலரும் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளனர்.

மாலிக்கின் இந்தப் பதக்க வேட்டையின் மூலம், 100 பேருக்கு மேலான இந்தியாவின் ஒலிம்பிக் குழு வென்ற பதக்கங்களை விட அதிகமாக பாராலிம்பிக் குழுவினர் வென்றிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்வின் இலட்சியம் நிறைவடைந்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக மாலிக் தெரிவித்திருக்கிறார்.

“ரியோ ஒலிம்பிக்கில் எமது நாட்டின் மூன்றாவது பதக்கம் இது . இந்திய மக்கள் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டின் சாத்தியக்கூறுகள் பற்றி விழிப்பு பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய பிரதமர் நந்திர மோதி மற்றும் பாலவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் உள்பட பல இந்தியர்கள் மாலிக்கின் இந்த சாதனையை புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.