தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்று நியூசிலாந்து ரக்பி அணி சாதனை

நியூசிலாந்து ரக்பி அணியான "த ஆல் பிளேக்ஸ்", டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்று உலக சாதனை படைத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வென்று, ரக்பி உலக கோப்பையை தக்கவைத்து கொண்ட முதல் அணியாக நியூசிலாந்து மாறியது

தீவிரமாக ஆனால், ஒரு அணி மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்திய ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்தின் ரக்பி அணி, ஆஸ்திரேலிய அணியை 37:10 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 18 ரக்பி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ள வரலாற்று பதிவை த ஆல் பிளேக்ஸ் அணி சொந்தமாக்கியிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு இத்தகைய வரலாற்று சாதனையை பதிவு செய்ய இருந்த த ஆல் பிளேக்ஸ் அணியை ஆஸ்திரேலியா தடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்ரிக்காவின் பழைய வரலாற்று சாதனையான தொடர்ந்து 17 போட்டிகளில் வெற்றியை நியூசிலாந்து ரக்பி அணி சமன் செய்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்