சீன கால்பந்து அணிக்கு உலக கோப்பையை வென்ற பயிற்சியாளர் மார்செல்லோ லிப்பி

உலக கோப்பையை வென்ற கால்பந்து பயிற்சியாளர் மார்செல்லோ லிப்பி சீன தேசிய கால்பந்து அணியின் பொறுப்பை ஏற்பார் என்று சீனா அறிவித்திருக்கிறது,

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2013 ஆம் ஆண்டு மார்செல்லோ லிப்பி சீன பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்

2006 உலக கோப்பை போட்டியில் இத்தாலி கால்பந்து அணியை வெற்றிக்கு வழிநடத்திய லிப்பி, சீனாவின் முன்னிலை கால்பந்து அணியான குவாங்சோள எவர்கிரனேடை வெற்றிப் பாதையில் நடத்தியிருக்கிறார்.

சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தானோடு நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்களில் சீன தேசிய அணி தோல்வியடைந்திருக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவதற்கு சிறிய வாய்ப்பே நிலவும் நிலையில் சீன தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லிப்பி ஏற்கிறார்.

கால்பந்து விளையாட்டின் ஆர்வலரான சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனா அடுத்த 15 ஆண்டுகளில் கால்பந்து போட்டியின் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்