கால்பந்து உலக கோப்பை: கட்டுமான பணியில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிப்பு

கத்தாரில் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியின் போது ஒருவர் உயிரிழந்திருப்பதாக முதல் முறையாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கட்டுமானத்தில் ஈடுபடும் குடியேறிகளின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாக விமர்சனம்

சனிக்கிழமை அந்த தொழிலாளி இறந்துள்ளதாக தெரிவித்திருக்கும் அவர்கள் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.

மோசமான பாதுகாப்பு தரங்களுக்காக இந்த ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இருப்பினும் இதுவரை மூன்று தொழிலாளர்கள் இறந்ததாக அவர்கள் கூறினாலும், யாரும் பணி தொடர்பாக இறக்கவில்லை என்கின்றனர்.

டஜன் கணக்கான தொழிலாளர்கள் இங்கு ஏற்பட்ட விபத்துக்களில் இறந்துள்ளதாக மனித உரிமைகள் குழுவினர் கூறுகின்றனர்.

உலக கோப்பை விளையாட்டு போட்டிக்கான வசதிகளின் கட்டுமானத்தில் ஈடுபடும் குடியேறிகளின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்