இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் முதல் வெற்றி

டாக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச தேசிய கிரிகெட் அணி இங்கிலாந்தை வென்றிருப்பதால் அந்நாட்டில் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலிஸ்டையர் குக் மற்றும் பென் டக்கட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஒரு முக்கிய நாட்டின் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வங்கதேசம் வென்றிருக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இதுவாகும்.

இரண்டாவது இன்னிங்சில் தேனீர் இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணியின் 10 பேரும் ஆட்டமிழந்து விட்டனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பந்து வீச்சாளர் மெஹதி, ஜாணி பைர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, இந்த போட்டியில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

மிக விரைவாக பெற்ற இந்த வெற்றி ஆட்டத்தை பார்க்க மக்கள் பெருங்கூட்டமாக வந்திருந்தனர்.

பெரும்பாலோர் தேசிய நிறங்களிலும், தேசிய கிரிகெட் அணியின் வங்காள புலி இலட்சினையையும் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்கட் எடுத்திருந்த அதிகப்பட்ட ஓட்டங்களின் எண்ணிக்கை 15 தான்

வங்கதேசத்தில் நிகழ்ந்த தீவிரவாத வன்முறையால் இரண்டு இங்கிலாந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள மறுத்திருந்த நிலையில் இங்கிலாந்தின் வங்கதேசப் பயணம் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதல் இன்னிங்சில் பந்தை பிடித்ததை மாதிரியான கடினமான வாய்ப்பு ஜோ ரூட்டுக்கு கிடைத்து

வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றி என்று இந்த வெற்றியை வர்ணித்த இங்கிலாந்து கிரிகெட் அணியின் தலைவர் அலிஸ்டையர் குக், பல அணிகள் வங்கதேசத்திற்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்