வீட்டு பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு

பதினொரு வயதான முன்னாள் வீட்டுப்பணிப் பெண்ணை சித்ரவதை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், வங்கதேசத்தின் முன்னிலை கிரிக்கெட் ஆட்டக்காரர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வங்கதேச கிரிக்கெட் விரைவு பந்து வீச்சாளர் ஷாஹாதாத் ஹூசைன் (இடது)

மாக்ஃபுஸா அக்தர் ஹேப்பி என்ற சிறுமியை தாக்கியதாக விரைவு பந்து வீச்சாளர் ஷாஹாதாத் ஹூசைன், அவருடைய மனைவி ஜாஸ்மின் ஜஹான் மீது டாக்கா நீதிமன்றம் வழக்கு பதிவு செய்திருந்தது.

அவர்களுடைய குற்றத்தை உறுதி செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று ஹூசைன் வாதாடினர்.

இந்த சிறுமி உடைந்த கால்களோடும், பிற காயங்களோடும் துன்புறுவதை கண்டறிந்த பின்னர், ஹூசைன் இருண்டு மாதங்கள் சிறை காவலில் வைக்கப்பட்டார்.

முதலில் ஹூசைனை இடைநீக்கம் செய்திருந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், பின்னர் உள்நாட்டு விளையாட்டுக்களில் விளையாட அனுமதித்தது. ஆனால், எந்த அணியும் அவரை விளையாட தெரிவு செய்யவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்