50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் சதமடித்தனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption புஜாரா மற்றும் விராட் கோலி

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் தொடங்கியது. இது இந்திய அணித் தலைவரான விராட் கோலியின் 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்ற போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற கவுதம் கம்பீருக்கு பதிலாக கே. எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆட்டம் தொங்கிய இரண்டாவது ஓவரிலியே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆட்டமிழந்தார்.

சற்று நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் போது, புஜாராவுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்:

சிக்ஸர் அடித்து சதத்தை அடைந்த புஜாரா

ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இந்த இணை பின்னர் நன்கு அடித்தாடினர். 99 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸர் அடித்து, தனது 10-வது டெஸ்ட் சதத்தை புஜாரா எடுத்தார்.

119 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ஆட்டம் முடியும் தறுவாயில் ஆட்டமிழந்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜேம்ஸ் ஆண்டர்சன்

150 ரன்களை எடுத்த விராட் கோலி

241 பந்துகளில் 151 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்தியா 317 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் தனது 14-வது டெஸ்ட் சதத்தை விராட் கோலி பதிவு செய்தார்.

தொடர்புடைய தலைப்புகள்