ஜோகோவிச்சை வென்று அன்டி மர்ரீ மீண்டும் முதலிடம்

ஏடிபி உலக டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியனாக விளங்குகிற நோவாக் ஜோகோவிச்சை தோற்கடித்துள்ள பிரிட்டனின் அன்டி மர்ரீ, இந்த போட்டியில் தன்னுடைய முதலாவது பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வென்று வந்த ஜோகோவிச்சின் வெற்றி பயணத்தை, மர்ரீயின் இந்த வெற்றி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது

ஏடிபி எனப்படும் டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற இந்த போட்டியில் வென்றிருப்பதன் மூலம், 2016 ஆம் ஆண்டின் இறுதியை உலக தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதை தொடர்கின்ற வீரராக அன்டி மர்ரீ நிறைவு செய்ய இருக்கிறார்.

கூடுதலாக அறிய கீழுள்ள செய்தியில் கிளிக் செய்யவும்

பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார்

லண்டனின் ஒ2 விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற கணக்கில் மர்ரீ வெற்றி பெற்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் மூலம் 29 வயதாகும் மர்ரீ 24 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிய வீரராக வலம் வருகிறார்.

நான்கு ஆண்டுகளாக இந்த பட்டத்தை தொடர்ந்து வென்று வந்த ஜோகோவிச்சின் வெற்றி பயணத்தை, மர்ரீயின் இந்த வெற்றி, முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் ஆறு முறை வெற்றி பெற்ற ரோஜர் ஃபெடரரின் வரலாற்று பதிவை செர்பிய வீரரான ஜோகோவிச் சமன் செய்திருப்பார்.

இந்த இரு வீரர்களும் மோதியிருக்கும் 34 ஆட்டங்களில் 10-இல் மர்ரீ வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

லண்டனின் ஒ2 அரேனா அரங்கு உள்ளடக்கக்கூடிய 17 ஆயிரம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட இந்த ஆட்டம், ஒரு டென்னிஸ் விளையாட்டு என்பதை விட ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் குத்துசண்டை நடப்பது போன்ற உணர்வை வழங்கியது.

தொடர்புடைய தலைப்புகள்