விளையாட்டு வீரர்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல் பற்றி வெளியே சொல்ல ரூனி அழைப்பு

  • 25 நவம்பர் 2016

பயிற்சியாளர்களால் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் விளையாட்டு வீரர்கள் அதைப் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான வேன் ரூனி வலியுறுத்தியிருக்கிறார்.

பிரிட்டன் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இது பற்றிய தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னர், என்எஸ்பிசிசி என்ற பிரிட்டனின் குழந்தைகளுக்கான அறக்கட்டளையின் தூதராக விளங்கும் ரூனியின் இந்த கோரிக்கை வந்திருக்கிறது,

Image caption இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான வேன் ரூனி

குரூ அலெக்ஸாண்ரா என்கிற இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளராக 1980-களிலும், 90-களிலும் இருந்த பேரி பெனல் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதோடு, இது பற்றிய துஷ்பிரயோகம் பற்றி 5 முன்னாள் விளையாட்டு வீரர்கள் இதுவரை தெரிவித்திருக்கின்றனர்.

Image caption ஜாசன் டன்ஃபோர்டு, பெனலை அடித்திருப்பதாக கூறியுள்ளார்

இளைஞர்களுக்கு எதிரான பாலியல் தாக்குதலுக்காக மூன்றுமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Image caption அன்டி உட்வார்டின் கதை வெளிவர தொடங்கிய பின்னர், இங்கிலாந்து முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் டேவிட் ஒய்ட் (இடது) மற்றும் பால் ஸ்ட்டுவர்ட் (நடுவில்) துஷ்பிரயோகம் பற்றி பேசியுள்ளனர்

நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கருத்துக்கள் உள்ளன.