பாலியல் கொடுமையை பற்றி பேசாமல் இருக்க 50 ஆயிரம் பவுண்ட் செல்ஸீ கால்பந்து கிளப் வழங்கியதாக குற்றச்சாட்டு

செல்ஸீ கால்பந்து கிளப்பை சேர்ந்த முன்னாள் தலைமை சாரணர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பேசாமல் இருக்க அந்த கிளப் தனக்கு 50,000 பவுண்ட் வழங்கியதாக அந்த கிளப்பின் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image caption 1978 முதல் 1981 ஆம் ஆண்டுவரை செல்ஸீயின் முதல் அணியில் ஜான்சன் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1970களில் தான் ஒரு இளம் வீரராக இருந்த போது எடி ஹீத் என்பவரால் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாக தி மிரர் என்ற செய்தி நிறுவனத்திடம் கேரி ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது, எடி ஹீத் தற்போது உயிரோடு இல்லை.

2015 ஆம் ஆண்டில் ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ஜான்சன் கையெழுத்திட்டுள்ளதாகவும், 50,000 பவுண்ட்களை அந்த கிளப்பிடமிருந்து பெற்றுள்ளதாகவும் `தி மிரர்` தெரிவித்துள்ளது.

ஒரு முன்னாள் ஊழியரை பற்றி விசாரிக்க சட்ட நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளதாக செல்ஸீ தெரிவித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் கால்பந்து கிளப்களிலிருந்து மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 350 பேர் கடந்த கால நிகழ்வுகள் குறித்து புகார் கூறியுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ள நிலையில், கால்பந்து விளையாட்டில் பாலியல் கொடுமை குறித்த குற்றச்சாட்டுக்களில் இது சமீபத்திய குற்றச்சாட்டு ஆகும்.

1978 முதல் 1981 ஆம் ஆண்டுவரை செல்ஸீயின் முதல் அணியில் ஜான்சன் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்