அதிர்ஷ்டவசமாக உயிர் வாழ்கிறேன்: கத்தியால் குத்தப்பட்ட விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா

நேற்று (செவ்வாய்க்கிழமை) , தனது வீட்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு முறை சாம்பியனான பெட்ரா க்விடோவாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை PA
Image caption பெட்ரா க்விடோவா

இதனால் பெட்ரா அடுத்த மூன்று மாதங்களுக்கு டென்னிஸ் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பெட்ராவின் இடது கையில் உள்ள தசைநாண்கள் மற்றும் நரம்புகள் சீரமைப்பிற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் 4 மணி நேரம் போராடியுள்ளனர். பெட்ரா இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி குறிப்பிட்ட பெட்ரா க்விடோவா, ''நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக நன் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ''நான் தற்போது உயிர் வாழ்வது மிகவும் அதிர்ஷ்டவசமானது'' என்று தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பெட்ராவின் வீட்டில் புகுந்து அவரை கத்தியால் குத்திய நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில், பெட்ரா க்விட்டோவா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்