ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர்.

Image caption ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்

தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார்.

முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரையிறுதி போட்டியில் வென்ற செரீனா

கடந்த 2003-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வீனஸ் வில்லம்ஸ் வென்றார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செரீனா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்