23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ஸ்டெஃபி கிராஃப் சாதனையை முறியடித்தார் செரீனா

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தன்னுடைய சகோதரியான வீனஸை வென்று, செரீனா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இந்தப் போட்டியில் வென்றிருப்பது மூலம் 23 கிரான்ட்ஸ்லாம் வெற்றிகளோடு, முன்னதாக 22 கிரான்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றிருந்த ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார் செரீனா.

இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒற்றையர் பெண்கள் இறுதிப்போட்டியில் 6:4, 6:4 என்ற புள்ளிக்கணக்கில் செரீனா, வீனஸை வென்றார்.

படத்தின் காப்புரிமை AFP

நீண்டகாலமாக விளையாடி வருகின்ற டென்னிஸ் தொழில்முறை போட்டிகளில், இந்த வில்லியம்ஸ் சகோதரிகள் 8 கிரான்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகள் உள்பட 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

ஒன்பதாவது முறையாக நேருக்கு நேர் மோதியிருக்கும் இந்த கிரான்ட்ஸ்லாம் போட்டியில் வீனஸ் தோல்வியடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

செரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் தொடங்கினார்.

இன்றைய போட்டியில் வென்றிருப்பதன் மூலம் முதல் கிரான்ட்ஸ்லாம் வென்றதும், வரலாற்றுப் பதிவை சொந்தமாக்குகிற இந்தப் போட்டியை வென்றிருப்பதும் அதே மண்ணில்தான் என்று பெருமை சேர்ந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை, 6 ஆஸ்திரேலிய ஓபன், 3 பிரெஞ்ச் ஓபன், 7 விம்பிள்டன், 6 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வெற்றியை குவித்து 22 கிரான்ட்ஸ்லாம் போட்டிகளை வென்றிருந்த செரீனா, ஸ்டெஃபி கிராப் படைத்திருந்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது 23 கிரான்ட்ஸ்லாம் வெற்றிகளோடு செரீனா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

விம்பிள்டனில் 5 முறையும், அமெரிக்க ஓபனில் 2 முறையும் என வீனஸ் வில்லியம்ஸ் இதுவரை 7 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றி உள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகிய டென்னிஸ் போட்டிகளில் அவர் கோப்பை எதுவும் கைப்பற்றவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்