2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக நாடுகளை பங்கேற்க செய்யும் விரிவாக்கம் மூலம், ஏழு அணிகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பங்குகொள்ள முடியும் என்று, உலக கால்பந்து போட்டியின் நிர்வாக அமைப்பான, கால்பந்து சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜானி இன்ஃபான்டீனோ தெரிவித்திருக்கிறார்.

ஃபிஃபா தலைவர் ஜானி இன்ஃபான்டீனோ

பட மூலாதாரம், MICHAEL BUHOLZER/AFP/Getty Images

இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது பங்குகொள்ளும் 32 அணிகளுக்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டு 48 அணிகள் பங்குபெறும்.

இப்போது ஆப்ரிக்காவிலிருந்து 5 கால்பந்து அணிகள் உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்கின்றன.

பட மூலாதாரம், MAXIM SHIPENKOV/AFP/Getty Images

"கால்பந்து விளையாட்டின் உலக கோப்பை போட்டியில் செய்யப்படும் விரிவாக்கத்தின் மூலம், தன்னுடைய கண்டத்திற்கு 10 இடங்கள் வழங்கப்பட வேண்டும்" என்று கடந்த வாரம் தென் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் டானி ஜோர்டான் கூறியிருந்தார்.

கானாவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டபோது இன்ஃபான்டீனோ இதனை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,

காணொளி: கால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா?

காணொளிக் குறிப்பு,

கால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா?

கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது-காணொளி

காணொளிக் குறிப்பு,

கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது

கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி

காணொளிக் குறிப்பு,

கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்